/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மருத்துவ படிப்பு: ராணுவ வீரர் வாரிசுகளுக்கு அழைப்புமருத்துவ படிப்பு: ராணுவ வீரர் வாரிசுகளுக்கு அழைப்பு
மருத்துவ படிப்பு: ராணுவ வீரர் வாரிசுகளுக்கு அழைப்பு
மருத்துவ படிப்பு: ராணுவ வீரர் வாரிசுகளுக்கு அழைப்பு
மருத்துவ படிப்பு: ராணுவ வீரர் வாரிசுகளுக்கு அழைப்பு
ADDED : மே 31, 2010 02:17 AM
விருதுநகர்: மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் விண்ணப்பம் பரிந்துரைக்கப்படவுள்ளது.
இதில் போர் மற்றும் போரை போன்ற நடவடிக்கைகளின் போது பலியான படை வீரரின் மகன், மகள், விதவை. போரின் போது ஊனமுற்ற முன்னாள் படைவீரரின் மகன், மகள். படைப்பணியின் போது பணி காரணமாக இறந்த படை வீரரின் மகன், மகள், விதவை. படைப்பணி காரணமாக ஊனமுற்ற முன்னாள் படை வீரரின் மகன், மகள். வீர விருது பெற்ற இறந்த அல்லது ஓய்வு பெற்ற படை வீரரின் மகன், மகள். விதவை ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
மேல்நிலை வகுப்பு, பி.எஸ்சி., ஆங்கிலம், வேதியியல், உயிரியலில் குறைந்தது 50 சத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி படைத்தவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் வந்து உரிய படிவத்தை பெறலாம் என உதவி இயக்குனர் மேஜர் ஸ்ரீஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.